< Back
சினிமா செய்திகள்
நடிகர் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை...!
சினிமா செய்திகள்

நடிகர் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை...!

தினத்தந்தி
|
17 Aug 2023 10:00 AM IST

சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் 'சிரஞ்சீவி' நடித்த 'போலோ சங்கர்' படம் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து அதிரடி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள டாக்டர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் படப்பிடிப்பு காரணமாக, சிகிச்சையை தள்ளிப்போட்டு இருந்தார்.

தற்போது படம் ரிலீசானதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்து டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்தது.

ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன்பிறகு ஐதராபாத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் 2 அல்லது 3 மாத ஓய்வுக்கு பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

சிரஞ்சீவிக்கு ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வலது மற்றும் இடது தோள்பட்டைகளில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.

சிரஞ்சீவி போலவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் பிரபாசும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்