நடிகர் பகத் பாசில் பிறந்தநாள்; போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'புஷ்பா-2' படக்குழு...!
|நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளையொட்டி 'புஷ்பா-2' படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'புஷ்பா-தி ரூல்' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.