< Back
சினிமா செய்திகள்
நடிகர் அதர்வா படத்தின் முதல் பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா படத்தின் முதல் பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
17 Nov 2022 4:15 PM IST

நடிகர் அதர்வா தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார்


நடிகர் அதர்வா தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யாரோ யாரோ இவ என்ற வரிகளில் வெளியாகிருக்கும் இந்த பாடலை யாசின் நிசர் குரலில் எம்.அமுதன் வரிகளில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்