< Back
சினிமா செய்திகள்
நடிகர் அசோக் செல்வன் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

நடிகர் அசோக் செல்வன் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
15 March 2024 9:58 PM IST

அசோக் செல்வனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார் 'எமக்கு தொழில் ரொமேன்ஸ்' என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

அவந்திகா இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலாஜி கேசவன் படத்தை இயக்கவுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்