< Back
சினிமா செய்திகள்
அஜர்பைஜானில் மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

அஜர்பைஜானில் 'மிஸ்டர் எக்ஸ்' படப்பிடிப்பு

தினத்தந்தி
|
19 May 2024 4:58 PM IST

ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2005-ம் ஆண்டு வெளியான 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்து கலாபக் காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

தற்போது, ஆர்யா இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் மற்றும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் நடிக்கிறார். எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார்.

ஆக்சன் திரில்லராக உருவாகும் இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கவுதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார். சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்