< Back
சினிமா செய்திகள்
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட நடிகர் அருண் விஜய்!
சினிமா செய்திகள்

திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட நடிகர் அருண் விஜய்!

தினத்தந்தி
|
4 Aug 2023 9:05 AM IST

திருவண்ணாமலையில் தனது மனைவியுடன் நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.

மேலும், இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுரம் முன்பு அண்ணாமலையாரை, வணங்கி திருக்கோவிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையைச் சுற்றி நேற்று (ஆகஸ்டு 3) நள்ளிரவு தனது ரசிகர்கள் பட்டாளத்துடன் கிரிவலம் வந்தார்.

மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்திற்கு நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து இடுக்கு பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜயுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்