< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்
|13 Feb 2024 10:31 PM IST
கடந்த மாதம் வெளியான 'மிஷன் சாப்டர் ஒன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி,
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை எமி ஜாக்சன், நடிகை நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான 'மிஷன் சாப்டர் ஒன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் அருண் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு குழுமிய ரசிகர்களுடன் அருண் விஜய் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.