புதிய படத்துக்கு கதை எழுதிய நடிகர் அர்ஜுன்
|நடிகர் அர்ஜுன் எழுதிய கதையில் `மார்டின்' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் அர்ஜுனின் அக்காள் மகன் துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.பி. அர்ஜுன் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. உதய் கே.மேத்தா தயாரித்துள்ளார்.
அதிக பட்ஜெட்டில் அதிரடி சண்டை படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து துருவா சார்ஜா கூறும்போது, ``சினிமாவில் எனக்கு இன்ஸ்பிரேஷன் மாமா அர்ஜுன்தான். நான் கேட்டதால் `மார்டின்' கதையை உருவாக்கினார். ரசிகர்கள் எதையெல்லாம் விரும்புவார்கள் என்று ஆலோசித்து நிறைய மாற்றங்கள் செய்து இந்த கதையை உருவாக்கி உள்ளோம். இது இந்திய அளவில் பெரிய வெற்றிப்படமாக அமையும்'' என்றார்.
நாயகிகளாக வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் நடிக்கின்றனர். சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத்குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பகத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே, இசை: மணிசர்மா.