நடிகரான ஆடை வடிவமைப்பாளர்
|ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `லால் சலாம்' படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே நடிகராகி உள்ளார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே. இவர் `மூன்று பேர் மூன்று காதல்' படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகி `ராஜா ராணி', `இரும்புத்திரை', `தெறி', `பைரவா', `ரஜினி முருகன்', `மான் கராத்தே' உள்பட 46 படங்களில் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் வெளியான `மார்க் ஆண்டனி' படத்திலும் சவாலான ஆடை வடிவமைப்பை நேர்த்தியாக செய்து இருந்ததாக பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `லால் சலாம்' படத்தில் சத்யா என்.ஜே, நடிகராகி உள்ளார். இதுகுறித்து சத்யா கூறும்போது, ``ஆடை வடிவமைப்பாளராக இருந்து `லால் சலாம்' படத்தின் மூலம் நடிகராகி விட்டேன். இந்தப் படத்துக்காக 22 நாட்கள் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவரிடம் நிறைய விஷயங்களை கற்றேன்.
நான் கிரிக்கெட் வீரர் மலிங்கா தோற்றத்தில் இருப்பதாக சொன்னார்கள். மலிங்காவின் பயோபிக் பற்றி படம் எடுத்தால் அந்த ஆடிசனுக்கு முதல் ஆளாக சென்று நிற்பேன்'' என்றார்.