< Back
சினிமா செய்திகள்
நடிகரும் அ.தி.மு.க. பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்
சினிமா செய்திகள்

நடிகரும் அ.தி.மு.க. பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்

தினத்தந்தி
|
12 April 2024 8:10 AM IST

அ.தி.மு.க.வின் பேச்சாளராக நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.

சென்னை,

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள் மணி. சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாகவும் நடித்த இவர், தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமன்றி, அ.தி.மு.க.வின் பேச்சாளராகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழலில், வழக்கமான பிரசார பணிகளை முடித்து வந்து, சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அருள்மணி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்