< Back
சினிமா செய்திகள்
நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாள்; நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
சினிமா செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாள்; நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தினத்தந்தி
|
11 Oct 2022 2:27 PM IST

நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.



சென்னை,


இந்தி திரையுலகில் பிக் பி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எண்ணற்ற திரை துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தும் தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து உள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெஜண்ட்... எப்போதும் என்னை ஈர்த்தவர்களில் ஒருவர்... நம்முடைய பெருமைமிகு இந்திய திரை துறையில், உண்மையில் வியப்பை ஏற்படுத்தும் ஒரு நபர் மற்றும் சூப்பர் ஹீரோவின் 80-வது பிறந்த தினம்...

என்னுடைய அன்பிற்குரிய மற்றும் அதிக மதிப்புக்குரிய அமிதாப்ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... எப்போதும் அவருக்கு எனது அளவற்ற அன்பு மற்றும் மனப்பூர்வ வாழ்த்துகள் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து ஹம், அந்தாகானூன், ஜிரப்தார் உள்ளிட்ட பல இந்தி திரைப்படங்களில் ஒன்றாக நடித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்