< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த நடிகர் அல்லு அர்ஜுன்
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த நடிகர் அல்லு அர்ஜுன்

தினத்தந்தி
|
22 Aug 2024 1:13 PM IST

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் 'புஷ்பா 2' படத்தின் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். ஆனால் சமூக ஊடகங்களில் டிசம்பர் 20-ந் தேதி வெளியாகும் என வதந்திகள் பரவின. சமீபத்தில் நடைபெற்ற 'மாருதி நகர் சுப்ரமணியம்' என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமாரும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் 'புஷ்பா 2' படத்தின் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். அதாவது 'புஷ்பா 2' டிசம்பர் 6-ந் தேதி வெளியிடப்படும் என்பதை உறுதிசெய்தனர்.

மேலும் அல்லு அர்ஜுன், தான் வாழ்வில் இதுவரை செய்திராத சவாலான பணிகளை இப்படத்தில் செய்துள்ளதாக கூறினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமான விருந்தாகவும், மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்