< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஹாலிவுட் படத்தில் நடித்த ஆலியா பட் புகைப்படங்கள் வெளியீடு!
|7 Aug 2023 2:08 PM IST
ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஆலியா பட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு படங்ககளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் அவர் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆலியா பட் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். டாம் ஹார்பெர் இயக்கும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' என்ற ஆக்ஷன் படத்தில் கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து ஆலியா பட் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வருகிற 11-ந்தேதி ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்துள்ள ஆலியா பட் புகைப்படங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.