< Back
சினிமா செய்திகள்
அக்சய் குமாரின் சர்பிரா படத்தின் புதிய பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

அக்சய் குமாரின் 'சர்பிரா' படத்தின் புதிய பாடல் வெளியானது

தினத்தந்தி
|
28 Jun 2024 8:28 PM IST

அக்சய் குமார் நடித்துள்ள ‘சர்பிரா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்தார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ராதா மதன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், படத்திலிருந்து 'குடயா' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வௌியாகி உள்ளது. வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்