< Back
சினிமா செய்திகள்
நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி நேரில் ஆறுதல்
சினிமா செய்திகள்

நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி நேரில் ஆறுதல்

தினத்தந்தி
|
27 March 2023 1:04 PM IST

நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு பின்னர் நடிகர் சூர்யா நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு பின்னர் இன்று நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தியுடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது அஜித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். சூர்யாவும், கார்த்தியும் ஒன்றாக காரில் அஜித் வீட்டிற்குள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அஜித் தந்தையின் மறைவுக்கு நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகள்