துபாயில் ரசிகையுடன் நடனம் ஆடிய நடிகர் அஜித்குமார்- வீடியோ வைரல்
|புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நடிகர் அஜித் துபாய் சென்றுள்ளார்.
சென்னை,
நடிகர் அஜித்குமார் தற்போது ' விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் ஆரவ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்த்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் வைரலானது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நடிகர் அஜித் துபாய் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடும்பத்துடன் கப்பலில் உலா வந்த அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் தல, தல என ஆவலோடு கத்தியதை கேட்டு அவர்களுக்கு கப்பலில் இருந்தவாறே அஜித் கையசைத்த வீடியோ ஒன்று நேற்று வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், நடிகர் அஜித் துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் பெண் ரசிகை ஒருவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.