< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விமானத்தில் கைக்குழந்தையுடன் வந்த தாய்க்கு உதவிய நடிகர் அஜித்குமார்...!
|14 April 2023 3:13 PM IST
“நம்ம கூட இருக்கிறவங்கள நாம பாத்துகிட்டா” நடிகர் அஜித்குமார் உதவியது குறித்து இணையதளவாசி பகிர்ந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி உள்ளது.
சென்னை,
கிலாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாகப்பயணம் செய்த பெண்ணிற்கு உதவி செய்த நடிகர் அஜித்குமாரின் செயல் குறித்து அப்பெண்ணின் கணவர் நெகிழ்ச்சி அடைந்து பதிவிட்டுள்ளார்.
அதில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் குழந்தையுடன் பொருட்களையும் தூக்கி வந்த அப்பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்குப்புரியும் எனக்கூறி அவரே பொருட்களை தூக்கி உதவியது குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்து அப்பெண்ணின் கணவர் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.