< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் இயக்கும் அதிரடி கதை
|2 Dec 2022 12:07 PM IST
அருண் விஜய் நடித்துள்ள புதிய படம் ‘அச்சம் என்பது இல்லையே'. இதில் நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். விஜய் டைரக்டு செய்துள்ளார். ஒரு தந்தை தனது மகளுக்காக லண்டன் நோக்கி பயணிக்கிறார். அங்கு அவருக்கு நேரும் சிக்கல்கள் என்ன என்பது கதை. அதிரடி சண்டைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த படம் தயாராகி உள்ளது. படம் குறித்து டைரக்டர் விஜய் கூறும்போது,
"செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்.
இந்தக் கதை முழுவதும் ஆக்ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தேடியபோது, இதை சரியாக செய்யக்கூடியவர் அருண் விஜய் என தோன்றியது. அதை படத்தில் சிறப்பாகவும் செய்திருக்கிறார். எமி ஜாக்சன் லண்டன் சிறையின் ஜெயிலராக நடித்திருக்கிறார். அவருக்கும் சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. நிமிஷா விஜயன் படத்தின் இன்னொரு ஈர்க்கக் கூடிய விஷயமாக இருப்பார்" என்றார். இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு: சந்தீப் கே.விஜய்.