< Back
சினிமா செய்திகள்
மகேஷ் பாபு படத்தில் முக்கிய பாத்திரத்தில்... - புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை

image courtecy:instagram@neerusehgal07

சினிமா செய்திகள்

மகேஷ் பாபு படத்தில் முக்கிய பாத்திரத்தில்... - புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை

தினத்தந்தி
|
26 April 2024 11:15 AM IST

இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபுவின் 29-வது படத்தை இயக்குகிறார்.

சென்னை,

பிரபல இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக ஆர்.ஆர்.ஆர். படம் ஜப்பானில் திரையிடப்பட்டது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபுவின் 29-வது படத்தை இயக்குகிறார். மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமீபத்தில், நடிகர் மகேஷ் பாபு மற்றும் டைரக்டர் ராஜமவுலி துபாயில் இருந்து ஐதராபாத் திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதில் மகேஷ் பாபு தலையில் நீண்ட முடிகளுடன் காணப்பட்டார்.

இதனை கண்ட ரசிகர்கள், இந்த தோற்றத்தில் மகேஷ் பாபு சிங்கம்போல இருப்பதாக தெரிவித்தனர். மேலும் படம் குறித்த அப்டேட்டையும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், பிரபல நடிகை நீரு சேகல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ் பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், 'விரைவில் ஆக்சன்' என்றும் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்களில் ஒருவர், மகேஷ் பாபு படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நடிகை நீரு சேகல் 'ஆம்' என்று பதிலளித்துள்ளார். இதனையடுத்து மகேஷ் பாபுவின் 29-வது படத்தில் இவர் நடிக்கிறார் என்று இணையத்தில் தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மகேஷ் பாபுவின் 29-வது படத்தில் இவர் நடிப்பதாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்