< Back
சினிமா செய்திகள்
பட அதிபர் சங்கம் நடவடிக்கை... அதர்வா, யோகிபாபு, கிங்ஸ்லிக்கு தடை?
சினிமா செய்திகள்

பட அதிபர் சங்கம் நடவடிக்கை... அதர்வா, யோகிபாபு, கிங்ஸ்லிக்கு தடை?

தினத்தந்தி
|
20 Jun 2023 11:16 AM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், பட அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் தொடர்ந்து பிரச்சினைகள் செய்து வரும் 5 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த நடிகர்களின் பெயர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 5 நடிகர்களுக்கும் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடவடிக்கைக்கு உள்ளாகும் நடிகர்கள் பட்டியலில் அதர்வா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர் ஒருவர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி லெக் பீஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமும் பெற்றுக் கொண்டு பிறகு படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதுபோல் நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது தயாரிப்பாளர் ஞானவேல் புகார் அளித்து இருக்கிறார். நடிகர் அதர்வா, யோகிபாபு ஆகியோர் மீதும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புகார்கள் வந்து இருப்பதாக பட அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்