< Back
சினிமா செய்திகள்
விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - நடிகர் ஷாம்
சினிமா செய்திகள்

விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - நடிகர் ஷாம்

தினத்தந்தி
|
8 Jan 2023 6:28 AM IST

பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ஷாம் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில்,

''வாரிசு படத்தில் விஜய் அண்ணனாக நடித்து இருக்கிறேன். தமிழ்நாடே கொண்டாடும் விஜய்யின் எளிமையும், தொழில் ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. காட்சியில் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றேன். விஜய்யுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது" என்றார். மேலும் ஷாம் கூறும்போது, வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி படத்தில் நடித்து இருக்கிறேன். மேலும் சில படங்களிலும் நடிக்கிறேன். கன்னட படத்திலும் நடிக்கிறேன். விரைவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளேன் விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா 3-ம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு நடிப்பை வெளிப்படுத்தும்படியான கதாபாத்திரமாக அது இருக்கும். சேரனும் இதில் நடிக்கிறார். இந்த படம் வரவேற்பை பெறும். கோலி சோடா 3 படம் ஓ.டி.டியில் வெளியாகும்'' என்றார்.

மேலும் செய்திகள்