விஜய்யுடன் இணைந்து நடிக்கிறேனா? நடிகை சினேகா பதில்
|வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசியாக வலம் வரும் சினேகா, 3 ஆண்டுகளுக்கு பிறகு 'ஷாட் பூட் த்ரீ' படத்தில் நடித்துள்ளார். இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தநிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சினேகா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசும்போது, 'வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நான் நடிப்பதாக ஏதேதோ பேசுகிறார்கள். அதுகுறித்து இப்போது கருத்துக்கூற மாட்டேன் என்றார்.
மேலும், ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், "என்னை பொறுத்தவரையில் 'புதுப்பேட்டை' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். கொஞ்சம் தவறினாலும் விமர்சனத்தை ஏற்படுத்திடும் கதாபாத்திரம். குடும்ப பாங்காக நடித்து வரும் எனக்கு இது யோசிக்கவும் வைத்தது. ஆனால் அதை மிகவும் அழகாக உருவாக்கி தந்தார், இயக்குனர் செல்வராகவன்.
உண்மையிலேயே அது மாதிரி வலிமையான, எதிர்மறை கதாபாத்திரங்கள் நடிக்க எனக்கு மிகவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்" என்று அவர் பேசினார்.