< Back
சினிமா செய்திகள்
சண்டை காட்சிகளில் நடிப்பது கஷ்டம் - நடிகர் சிம்பு
சினிமா செய்திகள்

சண்டை காட்சிகளில் நடிப்பது கஷ்டம் - நடிகர் சிம்பு

தினத்தந்தி
|
26 March 2023 7:42 AM IST

ஓபிலி கிருஷ்ணா இயக்கிய 'பத்து தல' படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்பு அளித்துள்ள பேட்டியில், "நான் பத்து தல படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு கவுதம் கார்த்திக்தான் காரணம். அவர் கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். கஷ்டத்தை ஜாலியாக எடுத்தவர்கள் வாழ்க்கையில் தோற்க வாய்ப்பு இல்லை.

சில ஹீரோக்கள் ஆக்ஷன் காட்சியில் நடித்தால் இவரெல்லாம் ஏன் சண்டை காட்சிகளில் நடிக்கிறார் என்று சில நேரம் நினைக்க தோன்றும். அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பது கஷ்டம். ஒரு ஹீரோ ஆக்ஷனில் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது.

ஆனால் கவுதம் கார்த்திக் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். கவுதம் கார்த்திக் சண்டை காட்சியை அருகில் இருந்து பார்த்து ரசித்தேன்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு என் மீது தனி பாசம் உண்டு. இந்த படத்துக்கும் சிறப்பான பாடல் பின்னணி இசையை கொடுத்து இருக்கிறார். பத்து தல பட டிரைலருக்கு கடந்த வாரம் இசையை கொடுத்தார். பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தார். மறுநாள் இன்னொரு இசை நிகழ்ச்சி, பிறகு லண்டனில் பொன்னியின் செல்வன் 2 இசைப்பணி, இப்போது சென்னை திரும்பி பத்து தல படத்தின் இசை வேலையில் இருக்கிறார். அவரது உழைப்பை பார்த்து வியக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்