< Back
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த நடிப்பு அனுபவம்
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த நடிப்பு அனுபவம்

தினத்தந்தி
|
19 Oct 2022 8:06 AM IST

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

''சினிமாவில் நடிக்க கதையைக் கேட்கும்போதே கதை பிடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தில் நான் ஒன்றி போகிறேன். நடிப்பதற்கு முன்பிருந்தே அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவம் என் மனதில் ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடிக்க ஆரம்பிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவேன்.

என்னை பொறுத்தவரை கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மட்டுமல்ல நடித்து முடித்த பிறகும் நீண்ட நாட்கள் வரை அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் என் மீது இருந்து கொண்டே இருக்கும். அந்த கதாபாத்திரங்கள் என்னை விடாமல் பின் தொடரும். அப்படி என்னோடு சேர்ந்து எத்தனையோ கேரக்டர்கள் சில மாதங்கள் ஆண்டுகள் கூட பயணம் செய்தன" என்றார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது 'போலா ஷங்கர்' என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடிக்கிறார். தூம் தாம் தோஸ்தானா என்ற தசரா தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆடிய லுங்கி டான்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்