படப்பிடிப்பில் விபத்து... நடிகர் அமிதாப்பச்சன் காயம்
|பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. நாக அஸ்வின் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அமிதாப்பச்சனும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியில் அமிதாப்பச்சன் நடித்தபோது எதிர்பாராமல் நடந்த விபத்தில் காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு விலா எலும்புகளில் காயம் இருந்தது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அமிதாப்பச்சன் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.