< Back
சினிமா செய்திகள்
சுசீந்திரன் படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து
சினிமா செய்திகள்

சுசீந்திரன் படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து

தினத்தந்தி
|
1 Jun 2023 6:50 AM IST

டைரக்டர் சுசீந்திரன் மார்கழி திங்கள் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை டைரக்டர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் டைரக்டு செய்கிறார். இவர் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம், சமுத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மார்கழி திங்கள் படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியில் உள்ள மக்காச்சோள தோட்டத்தில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்புக்காக பெரிய ஏணிகள் அமைத்து ராட்சத லைட்டுகளை கட்டி இருந்தனர். அந்த பகுதியில் திடீரென்று மழை பெய்தது. அதோடு படப்பிடிப்பு நடந்த இடத்தில் மின்னலும் தாக்கியது. இந்த விபத்தில் படக்குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், "மார்கழி திங்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இடி மின்னலுடன் பயங்கர மழை பெய்தது. படப்பிடிப்புகாக கட்டி இருந்த லைட்டுகள் கீழே விழுந்து நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்