தந்தையை கேலி செய்த நிகழ்ச்சி; கோபத்தில் வெளியேறிய அபிஷேக் பச்சன்
|இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபத்தில் அபிஷேக் பச்சன் வெளியேறினார்.
இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன் எத்தனையோ வெற்றி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தற்போது 80 வயதான நிலையிலும் தொடர்ந்து நடிக்கிறார். நிறைய விளம்பர படங்களிலும் நடிக்கிறார். இவரது வாரிசான அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக உயர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் வந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியை இந்தி நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார். இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். என்ன நடக்கிறது என்று அங்கிருந்தவர்கள் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அபிஷேக் பச்சன் வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.