< Back
சினிமா செய்திகள்
உண்மை சம்பவம் படத்தில் ஆரவ்
சினிமா செய்திகள்

உண்மை சம்பவம் படத்தில் ஆரவ்

தினத்தந்தி
|
20 Jan 2023 12:26 PM IST

1997-ல் இரண்டு சமூகத்தினர் இடையே நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புதிய படம் தயராகிறது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகிபாபு, காளி வெங்கட், பேபி கிருத்திகா ஆகியோரும் நடிக்கின்றனர். முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கணேஷ் விநாயகன் டைரக்டு செய்கிறார். அவர் கூறும்போது, ``இந்தப் படத்தில் காடு, நிலம், கல்வி சார்ந்த பிரச்சினைகள் பேசப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவின் வரவேற்கத்தக்க படமாக இது இருக்கும்'' என்றார். எஸ்.ஜி.சரவணன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: சுகுமார், படப்பிடிப்பு அடுத்த மாதம் கொடைக்கானல், தென்மலை, தேனி, டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்