ஓட்டுக் கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க... வைரலாகும் அமீர் படத்தின் பாடல்
|அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் 'உயிர் தமிழுக்கு' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் 'ஓட்டுக் கேட்டு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை குரு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.