லால்சிங் சத்தா படம் தோல்வி: சம்பளத்தை விட்டு கொடுத்த அமீர்கான்
|ஒப்பந்தபடி தனக்கு பேசப்பட்ட சம்பளம் 100 கோடியை விட்டுக் கொடுக்க அமீர்கான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமீர்கான் நடித்து திரைக்கு வந்த லால்சிங் சத்தா படம் பெரிய தோல்வி அடைந்தது. பாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்காக இது உருவாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட்டனர்.
லால்சிங் சத்தா திரைக்கு வரும் முன்பே படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் ஹேஷ்டேக் டிரண்ட் ஆனது. படத்தின் தோல்விக்கு இதுவும் காரணம் என்கின்றனர். ரூ.180 கோடி செலவில் தயாரான லால்சிங் சத்தா வசூல் ரூ.100 கோடியை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. விநியோகஸ்தர்கள் அமீர்கானிடம் நஷ்ட ஈடு கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டு கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளத்தை வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கருதி படத்தின் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்றுக்கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
லால்சிங் சத்தா படத்துக்காக அமீர்கான் 4 ஆண்டுகள் உழைப்பை கொடுத்தார். அந்த உழைப்புக்கான ஊதியமாக ஒரு பைசா கூட பெறவில்லை.