< Back
சினிமா செய்திகள்
தமிழில் வரும் அமீர்கான் படம்
சினிமா செய்திகள்

தமிழில் வரும் அமீர்கான் படம்

தினத்தந்தி
|
18 July 2022 12:18 PM IST

பாலிவுட் நடிகர் அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் டப்பிங் வெளியிடப்படுகிறது.

சமீப காலமாக அதிக தமிழ் படங்கள் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன. இதுபோல் பாகுபலி வெற்றிக்கு பிறகு தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். இந்தி படங்களையும் தமிழில் வெளியிடுகின்றனர்.

இந்த வரிசையில் அமீர்கான் நடிப்பில் தயாராகி உள்ள லால்சிங் சத்தா இந்தி படத்தை உதயநிதி தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார். ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடித்து 1994-ல் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்காக லால் சிங் சத்தா உருவாகி உள்ளது.

பாரஸ்ட் கம்ப் படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. லால் சிங் சத்தா இந்தி படத்தில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கி உள்ளார். இதில் விஜய்சேதுபதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தனர்.

சில காரணங்களால் அவர் விலகியதை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்