< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க விரும்பாத அமீர்கான்
சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க விரும்பாத அமீர்கான்

தினத்தந்தி
|
2 Jun 2023 7:43 AM IST

அமீர்கான் 4 வருடங்களுக்கு பிறகு நடித்து, தயாரித்து திரைக்கு வந்த லால் சிங் சத்தா இந்தி படம் தோல்வி அடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார். அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் மும்பையில் நடந்த படவிழா நிகழ்ச்சியொன்றில் அமீர்கான் பங்கேற்று பேசும்போது, "லால் சிங் சத்தா படத்துக்கு பிறகு நான் எந்த படத்தில் நடிக்க போகிறேன் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். சினிமாவில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை.

கொஞ்ச காலம் சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புகிறேன். தற்போது குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்