< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான் ?
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான் ?

தினத்தந்தி
|
19 Aug 2024 1:06 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கும் பான் இந்தியா படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழில் 'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'கூலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்