நடிகர் அமீர்கான் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்...!
|நடிகர் அமீர்கான் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 13-ம் தேதி (நேற்று) முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக்கொடி ஏற்றினார். தனது வீட்டின் மாடியில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பகுதியில் அமீர்கான் தனது மகள் இரா கானுடன் நிற்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.