ஓய்வுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் அமீர்கான்
|அமீர்கான் 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
மும்பை,
இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கானுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அமீர்கான் நடித்த 'லால் சிங் சத்தா' படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அமீர்கான் 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக அமீர்கான் சென்னையிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அமீர்கான் மீண்டும் நடிக்க உள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் அவர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ந்தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்துக்காக அவர் 80 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து அமீர்கான் 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இந்த படத்தில் சன்னி டிவோல் கதாநாயகனாக நடிக்கிறார்.