< Back
சினிமா செய்திகள்
விஜய்க்கு வில்லனாகும் அமீர்கான்?
சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாகும் அமீர்கான்?

தினத்தந்தி
|
6 Sept 2023 11:58 AM IST

இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் தமிழ் படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது விஜய்யின் 'லியோ' படத்தில் முன்னணி இந்தி நடிகரான சஞ்சய்தத் வில்லனாக நடித்து வருகிறார். இந்த வரிசையில் நடிகர் அமீர்கானும் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2-ம் பாகத்தையும் எடுக்கிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசி உள்ளார்.

இதன் மூலம் விஜய் அல்லது ஜெயம் ரவி படத்தில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

விஜய் படத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமீர்கான் நடிக்க சம்மதிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும். அமீர்கான் ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் செய்திகள்