'ஆடுஜீவிதம்' -13 மணி நேரத்தில் 63,000 டிக்கெட்டுகள் விற்பனை
|'ஆடுஜீவிதம்' படம், வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது 'ஆடுஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. தொடங்கி 13 மணி நேரத்தில் சுமார் 63 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.