
image courtecy:twitter@PrithviOfficial
வசூல் வேட்டையில் 'ஆடு ஜீவிதம்' - மூன்றாவது நாளில் இவ்வளவு வசூலா..!

'ஆடு ஜீவிதம்' திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28-ம் தேதி வெளியானது.
'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. இரண்டாவது நாளில் ரூ. 6.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் மூன்றாவது நாளில் ரூ. 7.75 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 21.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.