< Back
சினிமா செய்திகள்
கணவருடன் கிளப்பில் குத்தாட்டம் போடும் ஆடு ஜீவிதம் பட நடிகை; வைரல் வீடியோ!
சினிமா செய்திகள்

கணவருடன் கிளப்பில் குத்தாட்டம் போடும் ஆடு ஜீவிதம் பட நடிகை; வைரல் வீடியோ!

தினத்தந்தி
|
16 March 2024 5:07 PM IST

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால் தனது 7வது மாதத்தை கிளப்பில் நடனம் ஆடிக் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.

இயக்குனர் விஜய் உடனான மண முறிவுக்குப் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு தனது நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார்.

இவருக்குப் பக்க பலமாக இவரது கணவர் தேசாயும் அவருடனிருந்து கவனித்தார். இந்த சூழ்நிலையில்தான் பிருத்விராஜூடன் இவர் நடித்த 'ஆடுஜீவிதம்' படத்தின் புரோமோஷன் பணிகளில் கடந்த வாரம் கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பேட்டி என பிஸியாக இருந்தவர் இப்போது கணவருடன் ரிலாக்ஸாக கிளப்பில் செம ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, 'இப்படித்தான் எங்கள் ஏழாவது மாதத்தை நாங்கள் நடனத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்றோம். உங்கள் எல்லோருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமலாபால்.

மேலும் செய்திகள்