'காந்தாரா' சாயலில் உருவாகும் படத்தில் ஆதி
|கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு லாபம் பார்த்தனர். படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்த ரிஷப் ஷெட்டியை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் காவல் தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது.
இந்த நிலையில் 'காந்தாரா' படம் சாயலில் குலதெய்வ வழிபாட்டை மையமாக வைத்து தமிழில் புதிய பக்தி படம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார்.
இந்த படத்தை மலையன், வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான எம்.பி.கோபி டைரக்டு செய்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. டெல்லி பாபு தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசைமைக்க பேசி வருகிறார்கள்.
இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.