மிரட்டும் லுக்கில் ஆதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
|இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சப்தம்'. இப்படம் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சப்தம்'. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
'7ஜி ஃபிலிம்ஸ்' சிவா மற்றும் இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படம் ஹாரர், திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
'சப்தம்' திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய் 2 கோடி செலவில்,120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்ட செட் உருவாக்கி படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 'சப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்கு முன்பு அறிவழகன் - ஆதி காம்போவில் 'ஈரம்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.