< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆதி, ஹன்சிகா நடிக்கும் 'பாட்னர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|3 Aug 2023 4:37 PM IST
ஆதி, ஹன்சிகா நடித்துள்ள 'பாட்னர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'பாட்னர்'. இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராயல் பர்சுனா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.