< Back
சினிமா செய்திகள்
ஆதி - லட்சுமி மேனனின் சப்தம் பட வெளியீடு குறித்த அப்டேட்!
சினிமா செய்திகள்

ஆதி - லட்சுமி மேனனின் 'சப்தம்' பட வெளியீடு குறித்த அப்டேட்!

தினத்தந்தி
|
13 Jun 2024 6:48 PM IST

சப்தம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை,

இயக்குனர் அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்துள்ளார்

இதன் மூலம் இயக்குனர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்துக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.


ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மூணாறு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து படத்தின் டப்பிங் பணிகளும், பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

சப்தம் படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சப்தம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்