ரூ.5 கோடிக்கு ஏலம்போன 'டைட்டானிக்' பட மரக் கதவு
|1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய திரைப்படம் 'டைட்டானிக்'.
டெக்சாஸ்,
உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பயணிகள் கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின்போதே அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி மூழ்கிபோனது. அதில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த துயர சம்பவம் நடந்தது. அதனை மையப்படுத்தி 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'டைட்டானிக்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மரக்கதவை பிடித்தபடி, நாயகன் டிகாப்ரியோவும் நாயகி கேட் வின்ஸ்லெட்டும் மிதந்தவாறு இருப்பார்கள். இந்த மரக்கதவு சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
டெக்சாசில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் அந்த மரக் கதவு சுமார் ரூ. 5 கோடிக்கு ஏலம் போயுள்ளது.