வைரலாகும் புகைப்படம்; புது பேஷன் உடையில் பிரியா வாரியர்
|ஒரு பட விழாவில் பிரியா வாரியர் அணிந்திருந்த பேஷன் உடை பார்வையாளர்களை ஈர்த்தது.
சென்னை,
'ஒரு அடர் லவ்' மலையாள படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் பிரியா வாரியர். அந்த படத்தில் புருவத்தை உயர்த்தி கண்ணால் காதலை தெரிவிக்கும் காட்சி ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது.
2018-ம் ஆண்டில் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் பிரபலமாக மாறிய பிரியா வாரியர், மலையாளம் தாண்டி கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் இவரது 'புரோ' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் ஒரு பட விழாவில் பிரியா வாரியர் அணிந்திருந்த பேஷன் உடை பார்வையாளர்களை ஈர்த்தது. ஜாக்கெட் விளம்பரத்துக்கு வந்தது போல, இவர் அணிந்திருந்த உடையை பார்த்து பலர் விமர்சனமும் செய்து வருகிறார்கள்.
'ஜாக்கெட் பின்னாடி ஜன்னல் வைத்த காலமெல்லாம் பழசு, முன்னாடி ஜன்னல் வைப்பதே இப்போது புதுசு' என்று ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரியா வாரியர், சுற்றி பார்க்கும் ஒவ்வொரு இடத்தின் முன்பும் படம் எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அவரை 7.5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.