வைரலாகும் புகைப்படம்... நடுக்கடலில், படகில் அஜித்குமார், ஷாலினி
|தமிழ் திரையுலக நட்சத்திர தம்பதிகளான அஜித்குமார்-ஷாலினி ஜோடி குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை ஷாலினி வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அஜித் மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை வலைத்தளத்தில் ஷாலினி வெளியிட்டார். அதில், "குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்ற பதிவையும் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கினர்.
இந்த நிலையில் தற்போது நடுக்கடலில் படகில் அஜித்குமாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டு உள்ளார். இந்த படங்களும் வைரலாக பரவுகிறது. அஜித்குமார் அடுத்து தனது 62-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டு மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.