< Back
சினிமா செய்திகள்
வில்லனான கதாநாயகன்
சினிமா செய்திகள்

வில்லனான கதாநாயகன்

தினத்தந்தி
|
13 Jan 2023 9:38 AM IST

கதாநாயகனாக சில படங்களில் நடித்துள்ள சவுந்தரராஜா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த `அருவா சண்ட' படத்திலும் வில்லனாக மிரட்டினார். அவர் கூறும்போது, ``நான் இதுவரை 43 படங்களில் நடித்து இருக்கிறேன். அவற்றில் 33 படங்கள் ரிலீசாகி விட்டன. `இடிமுழக்கம்', `கள்வன்', `துடிக்கும் கரங்கள்', `பத்து தல' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். மலையாளத்தில் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்கிறேன். சுந்தர பாண்டியன், தர்மதுரை, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு பாராட்டுகள் கிடைத்தன. `தெறி' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. கதாநாயகன், குணசித்திர நடிகர், வில்லன் வேடம் என்று எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்