< Back
சினிமா செய்திகள்
கிராமத்து நகைச்சுவை கதை
சினிமா செய்திகள்

கிராமத்து நகைச்சுவை கதை

தினத்தந்தி
|
21 July 2023 12:04 PM IST

'டிராபிக் ராமசாமி' படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் விக்கி அடுத்து குழந்தைகள் படமொன்றை டைரக்டு செய்கிறார். படம் குறித்து அவர் கூறும்போது, ``கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும்போது அவர்களின் அறிவு விரிவடைகிறது. தொலைக்காட்சிகள் 90'களின் தொடக்கத்திலும், இணையதளம் 90'களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின.

அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்துபோய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.

இப்படம் கூகுளும், யூடியூப்பும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவையாகச் சொல்லும் வகையில் இருக்கும். இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்