< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா வெளியிட்ட வீடியோ
|13 Feb 2024 8:27 PM IST
நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னணி ஹீரோயினாக உள்ள நயன்தாரா கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரது 81 வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடிகை நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். கூந்தலை எடுத்து பின்னாடி போட்டு கண்ணாடி அணிந்துக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நயன்தாராவின் வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.