< Back
முன்னோட்டம்
பாய்  மனிதநேயத்தை வலியுறுத்தும் கதை
முன்னோட்டம்

'பாய்' மனிதநேயத்தை வலியுறுத்தும் கதை

தினத்தந்தி
|
16 Jun 2023 8:31 AM IST
நடிகர்: ஆதவா ஈஸ்வரா, தீரஜ் கெர் , நடிகை: நிதிஷா  டைரக்ஷன்: கமலநாதன் புவன் குமார் இசை: ஜித்தின் கே.ரோஷன். 

'பாய்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ஆதவா ஈஸ்வரா நாயகனாகவும் நிதிஷா நாயகியாகவும் தீரஜ் கெர் வில்லனாகவும் நடித்துள்ளனர். மனித நேயத்தை வலியுறுத்தும் படமாக உருவாகிறது. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது ``இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற சக்தி வாய்ந்த அம்சமாக மதம் இருக்கிறது. மனிதர்களின் ஏழ்மை மற்றும் பலவீனங்களைப் பயன்படுத்தி ஒரு சித்தாந்தத்திற்கு எப்படி அடிமை ஆக்கி வருகிறார்கள் என்பதை பற்றி இந்தப் படம் பேசுகிறது. படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம்தான் மேலானது என்பதுதான்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது'' என்றார்.கே ஆர் எஸ் பிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு: கிருஷ்ணமூர்த்தி, இசை: ஜித்தின் கே.ரோஷன்.

மேலும் செய்திகள்